Tuesday, 9 December 2025

Paddhu Akka's Memories...

எனக்கு ஆறு ஏழு வயசு இருக்கும். அம்மாவுக்கு 21 வயசு. அப்பா சாயந்திரம் டென்னிஸ் விளையாட க்ளப்புக்கு போயிடுவார். ஆத்துல டாக்டர் அம்மாவைப் பார்க்க வந்தோம் என்று தெருவில் அக்கம்பக்கம் இருக்கும் பெண்கள் அம்மாவிடம் பேச வருவார்கள். அம்மா அப்பா எப்பவுமே முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள். அக்ரஹாரத்தில் எல்லாம் இருந்தது இல்ல. ஜாதி வித்தியாசங்கள் பார்த்ததும்  இல்லை. அம்மாவிடம் பேச வரும் பெண்கள் எல்லோருமே பிள்ளைமார், முதலியார், முஸ்லீம், கிறிஸ்டியன் என்று இதர வகுப்பினர்தாம். இவர்கள் வரும்போது  அம்மா என்னை ஆத்தில் வேலை செய்யும் கோபாலுடன் வெளிய வாசலுக்கு அனுப்பி விடுவார். பெரியவர்கள் பேச்சு கேட்டுக்கொண்டு அவர்களுடன்  அந்த  இடத்தில்   குழந்தைகள் இருக்க கூடாது.  1985-87 ல், பாலக்காட்டில், தத்தமங்கலத்தில், அப்பா இருந்தபோது,  மாதர் சங்கப்  பெண்களுக்கு அம்மா, ஒரு தன்னார்வலராக  கைவேலை சொல்லிக்கொடுப்பார்.   அம்மாவுக்கு பொதுவாக மென்மையான  எதுவும்  பிடிக்கும். முசிறியில் வாசலில் ஆடு மேய்ப்பவனுடன் செல்லும் ஆட்டைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வருவார். " தொட்டுப்பார்... இது எவ்வளவு Softடா, வெல்வெட் போல  இருக்கு என்று சொல்லும்போது எனக்கு அதைத் தொடவே பயமா இருக்கும்.  அம்மாவுக்கு எப்பவுமே புதுசா கத்துக்க விருப்பம். சின்ன வயசுல, சைக்கிள் கத்துண்டார். குடத்தைக் கவுத்து போட்டு நீச்சல் கத்துண்டார். முசிரியாத்துல, தச்சன் மர  வேலை செய்த பின்னர் மிஞ்சியிருந்த நீளக் குச்சிகளில் ரெண்டு  Stilt - பண்ணிக் கொடுக்க சொல்லி, அதில் மேல் நின்று நடந்து காண்பிப்பார்.  ரொம்ப தைரியசாலியும் கூட. முசிரியாத்துல ஒரு தடவை திருடன் வந்துட்டான். அரசலூர் தாத்தாவும்  நம்மளோட இருந்தார். வாசல்ல ஏதோ சத்தம் கேட்கிறதே என்று அம்மா சொல்ல, தாத்தா வாசலைத் திறந்து பார்த்துட்டு ஒருத்தருமில்ல என்று திரும்பும்போது அவர் பின்னால் திருடன் நிற்பதை அம்மா பார்த்துவிட்டார். உடனே வேகமாக கதவை பட்டென்று சாத்திவிட்டார். அதுக்கப்புறம்தான் அவருக்கு  பயம் வந்து, திருடன்'ன்னு கத்தக்கூட குரல் வரல. 

No comments:

Post a Comment

Amma - Kamala - Kamoos is 100 Today...

Like I said for appa/thatha, it would have been ideal if all of us could have met and remembered her. But today, virtually we can do anythi...